ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அய்க்கூ கவிதைகள்


191..பனிமோடம்
நடுங்கும் கதிர்கள்
ரயில் முகப்பு விளக்கு.


192..கடலோரங்கள்
காண்பதற்கு ஏது?
ஆலை மயம்.


193..வெறும் சாக்கடை
ஓகோன்னு ...இருக்கு,
தண்டுக்கீரை வயல்.


194..கானாம் வாழைக்கீரை
கன்று ஆனேன்
ஊட்டும் அத்தைமகள்.


195..தலை ஓடிந்த பப்பாளி
ஆசை விரிகிறது..
பழங்கள்.


196..செவந்தி தோட்டம்
மூக்கைத் துளைக்கும்
பூச்சி மருந்து.
                                              
197..யாருமில்லா காடு
போகுதே! சுனையில்
நாளின் உதயம

198..பூ சந்தை
புகுந்தேன்
கந்தலானது சிந்தை.

301..மருந்துக்குக் கூட
இல்லை ஒருத்தி
மகளிர் விளையாட்டு.
                               
302..இளங்கலை பெண்
உறுதி யானாள்
கை'நாட்டு' பணக்காரன்.


303..யாரும் பேசுவதில்லை
அதிகமாய்...
அப்பா.


304..கைவிரித்தோம்
கைவிரித்தது
கை.


305..பரீச்சைக்கு
பத்திரப்படுத்தினாள்
பழைய நாள்காட்டி.



306..மரத்தடி
இன்பலேகியம்
தென்றல்.


307.குரலைச் சேகரிக்கிறான்
தவளை ஆய்வாளன்
தோழிகளோடு காதலி..