திங்கள், 22 ஆகஸ்ட், 2011

                                             அம்பானி ஊரில்....
                                                          அய்கூத் தொகுதி...
                                                                  முன்னுரை..                                                                                                                                                                                                                                                                                               


1.சுத்த புத்தியும் தெளியும் தான் கவிதையா?
 உத்தி எங்கிருந்து உதிரமாகிறது?
புத்தி மேட்டிமையால் கட்டமைக்கப்படுகிறதா?                                    
எது கவிதையில் தூக்கலாகவும் தூங்கலாகவும் முகங் காட்டணும் ?
பளீச்செனவும் பளாரெனவும் கருத்தை கவனத்தை அகமார்ந்த
வன்ம ஈர்ப்பை மூளை நெருடலை முனகல் சுவாசக் குளறலை
ஐம்புலனில் எவ்விடத்தில் எல்லாம் கிளூகிளூப்பை மிடுக்கார்ந்த
சிலுசிலுப்பைக் கைகுலுக்கிப் போக வேண்டும் கவிதை ?

2.தெளிவின்மை தூசு படர்ந்தமை புதிர்மை உயிர் உருக்குமை,
இன்னார்ந்த பரிமாணங்களில் கழுத்து வலிக்க
விறகு சுமந்து அலையும் மூதாட்டி பளு ஏந்தியா,கவிதை ?
வெறும் துளிப்பா தொகுப்பையோ,சென்ரியுத் தொகுதியையோ,
லிமரைக்கூப் பிரதியையோ,வைத்து ஆன்மச் செல்களை ஆனந்தப்
படுத்தி,அமைதிப்படுத்தி,குளிரவிக்கிற,மேதமை வாசகனோ,துருவித்துருவி
துழாவி,குடைந்து சலிக்காது,ரசிக்கும் ரசிகனோ அல்ல,நான் .

3.அறிவாளித்தனக் கவிதை_இறுதிவரியை,தூக்கி இடுப்பில் அமர்த்தியோ,
தலையில் வைத்தோ,என்னால் ஆடுகிற,மேன்மட்டக் குணாம்ச நீதி வழிகிற
ரீதியிலான திறன் நுட்பங்கள் என யாவுமற்ற,ஓர் பாமர நடத்தைகளினூடே
சிற்சில மின்மினி தரிசனப் பாத்தியமும் எட்டிப் பார்ப்பதுண்டு
அவ்வப்போது அந்த அளவில் தான் நான் .
இந்த வாழ்க்கை  வெறுமை,மேம்போக்குத்தனத்தையும் அன்றி வேறு
ஒத்துழைத்த மாதிரி இம்மட்டளவிலும் தென்பட்டதில்லை எனக்குள்.

4.வானந்தரப் பொருண்மையில் எதற்கும் வக்கற்ற இருண்மையில் ,
பிழிந்தெடுத்த கண்ணீ ர் தோறும் திரண்டெழும் அகப்போரில் முதுகுத்தண்டு
உளவும்,இலவுமான சொற்குழுமத்தில் சிலதான சில்மிசக் கறார் மிக்க 
சணுங்கலும், குலுங்கலுமான,கம்பீர கனிவுத் தெளிக்கும்,
வார்த்தைகளை வரவேற்று அரியாசனம் இடுகிறேன்,சிறிதேனும்
சிறுமூளையின் பங்கு தலைக்காட்டி விடக் கூடாதென்கிற
சிரத்தையூடான அச்ச்த்தில்.!

5.உணர்விலிருந்து வரும்போது பாதியும் ஏட்டில் விழும்போது மீதியும்
உணர்ச்சித்துடிப்பு உறிஞ்சிப் போய் விடுகிறது. இன்னும் அச்சேறும் போதினிலோ முற்றுமாக அழிந்துவிடுகிறதே! பெரும்பாலான
மெய்ப்பாடுகள்!.
இருப்பினும் வலித்து வழிந்து திணித்து துருத்தி பருவ உந்துதலை,
கட்டுக் கோப்பை முறுக்கை,முருகை வேர்மைத் திகட்டலை,
பக்குவ வேட்பையும்,எல்லாமுமான ஏகாந்த வெளியை,
வெற்றிடத்தொனியை,வெளிச்சமிட்டு காட்டும்,மென்வக்கிரம்,
சிலபோது இரைந்து ஓடுகிறது. வேலி மீறி இதயவெளி,சில கவிதைகளினூடாக!.
6.எதை நிருபித்தால் கவிதை? நிர்ணயச் சட்டம் கொண்டதா கவிதை
ஈராக் யுத்தக் கள ரத்தத்திலும்,நம் ஊர் பொட்டல் வெளி வரப்புச்
சிக்கல் குருதியிலும் அதே தொன்மச் செல்களே,அப்புறமேன் விருந்து
விருது வித்தியாசம்? உதைக்கிறது எங்கோ?, மூளை அணுக்களும்
இதய ரணங்களும் இணைவிக்கும் போதில் எடுத்து விடலும்,
மாற்றிப் போடலும்,இயல்பாம்சம் எல்லாக் கணங்களிலும் கண்
சிமிட்டத் தயார்,என்கிற கவிதைப் பொழுதுகள் கானல்வெளியில்
கண்டெத்தவை அல்ல!.

7.படிந்து படிந்து நொறுங்கித் தெறிக்கும் பிசிறு வைரங்கள் பிரசவ
நொடிகளில் பிரிந்து பிரவேசிக்கிறது மறுபொதில் பிறப்பதற்கான
ஒரு மரணம்!
கெட்டிக்காரத்தனம் பக்கத்துக்குப் பக்கம் நீர் மெத்தையிட்டுப்
படுத்திருக்கும் ஓரே குறிப்புத் தொனி வாய்ப்பாட்டு உத்தியில்!
திரைக்கதைபோல் நாயகனைப் படுநல்லவனாக, நறுஞ்சூழலாக
அமைத்து, சுண்டக் காய்ச்சி, நல்லவேளை சீவார்த்தங்கள்
தீய்ந்துப் போக விடமால் சிலவேனும் தப்பித்து விடுகின்றன.!
எல்லாம் உள்ளன வாழ்க்கை என்பதைக் கவிதையும் காட்ட
வேண்டும் என்கிற தார்மீகத் தவிப்புத் தாகம் என்னில் உண்டு.
என்றும்! சொல்லும்படி இருக்கணும்! சொல்நயம் சிறக்கணும்
அலங்காரத் தேர்வலம் என எந்த கோட்பாட்டு நெறியும்
கையாளாது மழலையின் நிர்வாணமாய் மழ்ச்சியுடன்
கைநீட்ட விட்டு தூக்கிக் கொள்ளுங்கள்!.

8.உலகளாவிய அங்கீகாரம்,ஓன்றும் அற்ற கவிதைக்கு
ஒரீரண்டு எழுதிய பலருக்கு வயிற்றெரிச்சலை,
சமூக ஒரு பட்சமான சாய்வுகளை, சந்தர்ப்பங்களை,வாரிக்
கொட்டுகின்றன!.
பன்மொழி திறத்த ஆட்களும் சரி, ஒருமொழி திறமற்ற ஆட்களும்
சரி,கவிதை என்பது வாழ்ந்து எழு(து)வது வாசித்தெழுதுவது அல்ல,
என்கிற சூட்சுமச் சூத்திரம் சுரக்கவே இல்லை பலருக்கும்!.காலக் கட்டமும்
பருவச்சூழல் திட்டமும் என்னாதான் அனைத்தும் ஒருங்கிணைந்த
ஒன்றான கவிதை இது என்ற கூற்றை எதிர் நிறுத்தினாலும் ஏதோ பல
விட்டுப் போன மாதிரியான உறுத்தல்,உந்துதல்கள்,உசுப்பிவிடாமல்
இல்லை.அந்தக் கவிதையில் என்றும்,பூதாகரத்தையே, மக்கள்
தூக்கிப் பிடித்தாலும்,எல்லைச் சொல்லி இறக்கிவிடும் மனோபாவத்தில்
தான் நான் என்றும் இருப்பேன்.

9.காரணம் மீறிய கவர்ச்சி,இதயம் மீறிய ஈர்ப்பு,இணைந்து ஓடினாலும்
இன்னும் தேவைப்படுகிறது, தாலி கட்டும் தருணக் கிரையத்திற்கு!.
தொடர் ஆளுமைக்கு ஆட்பட்பதால், நடுநடுவே சில நரை விழுந்திருக்கலாம்
பெருமிதம் விடும் வளமை, கவிதை மீமேலான கவன ஒன்றிப்பு,கண்களில்
இறங்கும் வெள்ளி இழைகளினூடே விளங்காத, விலங்காகாத விரசங்கள்
யாவும் புலம்பெயரப் போவதில்லை!.
மூன்று வரி கவிதைகள் என்று அய்கூவைத் தானப்படுத்திய திரு.பொன்.குமார்
அவர்களுக்கு மெய்மிகு நன்றிகள்.மற்றும் உங்களுக்கும்!.

நெஞ்சுவிலா  பதியும்  
பஞ்சுநிலா தமிழில்
ப.தமிழாளி.                                                                                   
                                              








கருத்துகள் இல்லை: