திங்கள், 22 ஆகஸ்ட், 2011

146. சக்கரம்
          சுற்றினாள்
             வந்துவிடுமோ! பானை.

147.அலுமினியப்பாத்திர ஆலை
         கசாலாய்க் கிடக்கிறது
           தொழிலாளர் மேனி.

148.முக்காலியும்
          ஆகாமல் போனது
              ஒருகால் இழந்த நாற்காலி.

149.உயர் மிகு மஞ்சம்
         துயில்விடுமோ!
            துயர் நெஞ்சம்.

150.செங்கல்
         சூளைக்கு
              விறகாகும் பனம்பழங்கள்.

151.மிதி வண்டி
     டெம்பொ அகலம்
       காலிக் குடங்கள்.

152.கண்ணாடிப் பேழையில்
         கோசா பழக் கீத்துகள்
              ஈக்களாய் சுற்றுபுரம்.


153.மின்தறிகள் அறை
         ஆச்சரியம்
             உறங்கும் குழந்தை.

154.காலி பாத்திரம்
          புன்னகை வீசுகிறது
             பசி.

155.கொசகொசன்னு
            கத்திரி படாத காடு
               பாவாணர் அய்யா மீசை. 

156.இந்தியா-பாகிஸ்தான் மோதல்
         குசியாயினர் ரசிகர்கள்
             அழகிகள் குத்தாட்டம்.


157.கேட்டே வந்தது
           நகரத்து வீட்டில்
              குடிநீர்.

158.தட்டு நறுக்குச் சத்தம்
    எழ வில்லை
            வளையோசை.

159.நகர வாசல்களில்
         முன்னிரவே விடிகிறது
               காலைநேரக் கோலம்.

160.மின் தடை இரவு
         நிமையத்தில் விலகியது
             எண்வடிவ மெழுகொளி.

161.உறிஞ்சும் கைம்பெண் உதடு
          மோட்சம் கண்டன
                சில்லிப் பூக்கள்.

162.சொன்னதைச் சொல்லும்
            கிளிப் பிள்ளையோ!
               மலை எதிரொலி.

163.இலக்கியம்
         தெரிந்தவர்களுக்கே கிடைக்கிறது
              பரிசும் பாராட்டும்.

164.கால்வாய் பாசனமின்றி
          மருதம் விளைவிக்கிறது
              புழுதிக் காற்று.

165.பெரியவர்கள் பேச்சிலே
            இருக்கின்றன அதிகம்
               குழந்தைப் பாடல்கள்.

166.கிணற்று நீருமின்றி
         தேசிய விளையாட்டு
              பன்னீரில் மட்டைப் பந்து.

167.ரொம்ப நாடுகளில்
           வாழ்கிறவன் வாடுகிறவன்
                ஞாலத்தில் தமிழன்.


168.நிறுவன இஷ்டம்
         கடைகாரர் கஷ்டம்
            காலாவதி மருந்து.

169.ஏன் எடுப்பதில்லை?
          நடிகைப் போன்றதோர்
         நடிகர் நீலப் படம்.

170.சர்ன்னு விடுகிறாள்,புவனா
          மாமாவுக்கு வரவில்லை
             தவளைக்கல் விளையாட்டு.
171.இருந்ததில்லை
           பார்த்து வளர்த்தும்
             தப்புச் செடி பலன்.

172.கீற்றுப் பந்தலில்
     இரைந்தன பொற்காசுகள்
       வெளிச்சம்.

173.சடைப்பிடித்து தொங்குது
     நகரக் கம்பங்களில்
       மின் ஒயர்கள்.

174.மூன்றாம் வகுப்பு கட்டணம்
     முகம் சுளிக்க வைக்கும்
        போதைப்பாக்கு எச்சில்.

175.எப்பவும்
     அழுத்தமாய் வருதே!
       பிவிசி பைப் கத்திரிப்பு.


176.அலங்காரம் இல்லை
     வண்ண உடை வாழ்வு
       கணினியுக விதவை.

177.தலையணைச் செய்பவள்
     தூங்குவதோ….!
        கைவைத்து.

178.கதிர் கட்டுகள்
     கனிந்தது வெதுவெதுப்பில்
       பப்பாளிக் காய்.

 179.அரும்புத்திரன் வரான்
     தந்தைக் கூவல்
       அதுக்கு இரை போடுங்க.

 180.தெவத்துப் பூசை
          சொளிக்கிறது கூடையில்
             தென்னம் பொட(படவை)


 181.முட்டைக் கோசு
          கழிவுகளில் கலகம்
       பன்றிப் பறழ்கள்.


182.இரும்புச் சிறை
     தாய்மடியில் குறும்பு
       சிங்கக் குருளை.


183.பழைய துணிகளின்
      கொள்கலன்
        ஏழைகள் தலையணை.


184.வள்ளலார் பாடம்
     தெரியாத மாணவி
        போதனை பிரம்படி.




185.வித்தியாசக் குரல்
      பூரிப்பிடுகிறாள்
        ஓசு பைப்பில் குழந்தை.

186.டார்ச்லைட் எரிய
      கை மறைத்தேன்
        பழுத்த இரும்புக் காட்சி.

187.லிவர்மேல் குதிகுதிக்க
      பிடுங்கி அடித்தது
        சுமையுந்து சக்கர போல்ட்.


188.முடிவெட்டிக் கொள்ளுதோ!
       இயந்திர ரம்பத்தில்
         தடுப்புச்சுவர் புல்வெளி.

189.திருகினாள் ஆகர்பிட் 
      பொத்தது.
         காதல்பலகை.


190.கொழிஞ்சிக் காரத் தாத்தா
       சிறாருக்கு நகைப்பு
         மட்காடுபோன மிதிவண்டி.

191.தனித்து தெரியும்
      கண்ணாடி அறையில்
        பார்வையாளர் வட்டம்.

192.இரும்புத் தோண்டி
      துளைக்கும் இரைச்சல்
        நண்டுகள்.
193.படி மல்லிக்கு ரூவா
       மறுக்கும் காட்டுக்காரன்
          ஐந்தாறு பிஞ்சுப்பூக்கள்.

194.இளஞ்சோளப் பயிர்
      சொக்குதே!ஐம்புலன்
         மரித்தது செம்மறி.
195.உணவு நேரமும்
     நடக்குது வேலை
       மின்சாதனங்கள்
196.அதிகாலை
      வயல்வெளி எங்கும்
        மருந்தடிக்கும் கூச்சல்.


197.வாரத்தில் அப்பத்தாவுக்கு 
      எட்டுநாள் உணவு
        தாளித்த குச்சிக்கிழங்கு.


198.அக்கா ஓடிய பிறகு
      அடுப்புக்குப் போனது
         களி துடுப்பு இரண்டும்.


199.101இலும் இருந்ததாம்
      சுவர்மண் பல்தேய்த்த
        பாட்டி பற்கள்.

200.சட்டி பானைங்க
     இன்றும் ஆயா வீட்டில்
       ஊணாங்கொடி பிரமணை.

201.வயசுப் பெண்ணை தடுத்தாள்
      ஈச்சம்பழத்திற்குத் தாய்
        களிகெவை.


202.நான்கே தாவணிகளில்
      பெற்று விட்டாள்
         இளங்கலை அறிவியல்.


203.பலருக்கு ஓரிரு மாதம்
      மூன்றாம் நாளே வரும்
         இன்றைய என் சட்டை.

204.காலியாகும் வீடு
      விட்டுவந்தது அட்டால்
        காலொடிந்த சந்துவமனை.

205.சுத்தம் இருந்தும்
      வெசனப்படும் இளமை
          கழுத்துபட்டை கிழிசல்.



206.தென்னையில் தவற
       கல்லிட்டு அனுப்பினாள்
         கோவணத்துள் தாய்.


207.விதவித காலணிகள்
       மயங்குது கல்லூரிக்குள்
          தேய்ந்த என் பேரகான்.


208.இடம்பிடித்து விடுகிறது
      ஒவ்வொரு நேர்காணலிலும்
         காங்கிரீட் கேள்வி_பதில்.

209.கால் நீட்டித் தூக்கம்
      தலைமாட்டுப் பக்கம்
         கோழிச்சோட்டு நாய்.

210.நீர் தொட்டி நினைவு
     நேரும் நாத்தனாவுக்கு
        சாக்கிட்டு கொன்ற பூனை.


211.நாடா உட்காந்தது

             மகிழும் நெசவாளி
                   போனது ஓரிரு இழை.

212.அப்பா மிதிவண்டியில்
       விழுந்தாள் பாவாடை சிக்கி
          கொரங்குபல்லில் பழக.


213.பொடணியைத் தட்டினான்
        எதிர்த்து அடித்தது
          கிரிஸ் கன்.

214.சாமி சொலியே பேசுகிறார்
      கந்தாயம் வசூலித்து
        நடக்கும் தோட்டி.


215.வேட்டை கறி
      சிக்கும் பல்லில்
        பால்ரஸ் ரவைகள்.

216.ஆட்டுக்காரம்மா பேத்தி
      சுத்தியே இருக்கிறாள்
        பழைய பேரிங்.


217.அந்த நிர்வாணச் சிறுமிக்கு
       வாங்கித் தருவது யார்?
         பேரிக்கா கீத்து.


218.வாசல் தொடங்கி
    சமையலில் இறங்கியது
      ஏத்தி சொருகிய தாவணி.


219.கொட்டமுத்து செடி நீ
       நொணா வரை நான்
          உப்புக்கட்டி தூக்கு.


220.புதிய மகிழுந்து
      எழும்பும் பாலுணர்ச்சி
         அறிமுகப்படுத்தும் நடிகை.


221.குறுக்கே வந்தாள்
      சூழ்ந்தது யாக்கை
        ஆரிய லட்டு.

222.சங்காயம் சறுக்கிட
      லாவகமாய் சுதாரித்தது
        பொறத்தாங்காலில் தாம்புமாடு.


223.அணுஅளவு பிரகாசம்
       இருட்டில் சாத்தியம்!
         சாணைப் பொறி.

224.நெட்டி முறித்தேன்
       பிரளைய வலி
          கெண்டைக்கால் கொரக்குலி.


225.எழிலானவை பொருட்கள்
      ஏச்சுகள்தான் அசிங்கம்
        செருப்பு சீமாறு கெட்டவார்த்தை.

226.நிறைய விருந்தோம்பல்களை
        கத்திசல்லைக் கொண்டே…
           இளநீர் சமர்பிக்கும் அன்னை.



227.சொங்கை   நிமிட்டி
          சகலை ஈன்ற பச்சைக்கம்பில்
           பிரிந்த அண்ணன் நேசம்.




228.பப்பாளி விதைகள்
      பிதுக்கி விளையாடினோம்
         காதல் முன் பருவம்.

229.தலைவர் சிலைக்கு
      அனுமதிக்க வில்லை
         வேறுசாதி தொகுதி.

230.உன் நா கவி
      உடலெங்கும் பேச…
        வேண்டும் ராணுவ பலம்.


231.டூப்லைட் என்கும்
      குழவியர்
        கைகளில் வாழைத்தண்டு.

232.தேநீர்
     அனல் வீசியது
       கடன் பேச்சு.


233.மாலை நேரம்
       திரும்பிக் கொண்டிருக்கிறது
         மேய்ச்சல் கூட்டம்.

234.கிச்சுகிச்சது யாரோ!
      கெக்கலிக்கிறது..
         பருத்திக்காடு.

235.பிராய்டிசம் பார்
      கெடாய்மேலேறும்
        ஆட்டுக்குட்டி.

236.அடுத்த வீட்டுக்கே
      தெரியவில்லை
         ஐந்தாறு நூல் கவிஞன்.

237.காய்ந்த செடி
      புணர்ச்சியில்
        ஈக்கள்.

238.யார் கடந்தாலும்
       நிற்பாள் வினாடிகள் சில
        வழியோரம் துவைக்கும் மடந்தை.


239.ஆழாக்கு புழுங்கரிசி
      தாவணி முடிஞ்சுப் போனாள்
        தண்ணீர் பாய்ச்ச,கம்பங்காடு.

கருத்துகள் இல்லை: